Saturday, July 23, 2011

8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு


      பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
      எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment